ETV Bharat / bharat

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - சென்னை

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 10, 2021, 1:21 PM IST

1. மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் - ஓபிஎஸ், இபிஎஸ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் என்று வாழ்த்தி, விநாயகர் சதுர்த்தி திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

2. உச்சி பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்!

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 60 கிலோ எடையிலான ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு படைக்கப்பட்டது.

3. புதிய ஆளுநரை வரவேற்று மு.க. ஸ்டாலின் ட்வீட்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவியை வரவேற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

4. ஆயுதங்களைக் காட்டி பெட்ரோல் பங்கில் 1.70 லட்சம் ரூபாய் கொள்ளை

கீழக்கரை அருகே பெட்ரோல் பங்கில் ஆயுதங்களைக் காட்டி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5. விருதுநகரில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: ஒருவர் மரணம், 8 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாயில்பட்டியில், பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

6. 'கணபதி பப்பா மோர்யா' - ராம்நாத், மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இருவரும் தங்களது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

7. இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பபானிபூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு இன்று (செப். 10) வேட்புமனுவைத் தாக்கல்செய்கிறார்.

8. அமெரிக்க-சீனா இடையேயான போட்டி மோதலாகாது - வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் உரையாடினார். இந்த உரையாடலில் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியானது மோதலாக மாறக்கூடாது என்று இருவரும் பரஸ்பரம் வலியுறுத்திக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

9. #AnnaattheFirstLook அண்ணாத்த வேற லெவல் பாத்து உஷாரு

'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

10. ஓடிடி தளத்தில் வெளியான டிக்கிலோனா!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ’டிக்கிலோனா’ திரைப்படம் நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.