ETV Bharat / bharat

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm - latest news

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top 10 news at 1 pm
1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm
author img

By

Published : Mar 14, 2021, 12:55 PM IST

கேரளாவில் 115 இடங்களில் பாஜக போட்டி: கூட்டணிக்கு 25 இடங்கள்

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 115 இடங்களில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்!

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் இன்று (மார்ச். 14) பாஜகவில் இணைந்தார்.

தஞ்சாவூரில் ஒரே பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கரோனா!

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் பயிலும் 56 மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தலை புறக்கணிக்கும் கடலூர் மீனவர்கள்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாக கூறி, வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திடீர் ரெய்டு : 4 கடைகளுக்கு சீல், 20 பேருக்கு அபராதம்

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இருமடங்கு உயர்ந்த கரோனா பாதிப்பு: சாலையில் இறங்கி ஆட்சியர் நேரடி நடவடிக்கை

கரோனா தொற்று இருமடங்கு அதிகரித்தை அடுத்து, மாவட்ட ஆட்சியரே சாலையில் இறங்கி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கும் மம்தா!

மார்ச் 10ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மம்தா சில நபர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தான் காரில் ஏற முயன்றபோது சுமார் ஐந்து பேர் தன்னைக் கீழே தள்ளியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' - அறிவிப்புப் பலகை மூலம் எதிர்க்கும் கிராமத்தார்

தெக்கூர் கிராம மக்கள் 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என ஊரின் எல்லையில் அறிவிப்புப் பலகையை வைத்துள்ளனர்.

ஸ்ரீ தெய்வநாயகி அம்மன் கோயில் மாசி மாத திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு!

சந்திரபுரம் அருகே உள்ள ஸ்ரீ தெய்வநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி மாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இயக்குநர் எஸ்பி ஜனநாதன் காலமானார்!

திரைப்பட இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இன்று (மார்ச் 14) காலமானார். அவருக்கு வயது 61. இவர் கடைசியாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் லாபம் படத்தை இயக்கி உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.