1. உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார்? - நாளை வாக்கு எண்ணிக்கை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
2. அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல்
லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் கைதான ஆஷிஷ் மிஸ்ராவை மூன்று போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. ஆதிக்கசாதி பெண்ணைக் காதலித்த இளைஞர் ஆணவப்படுகொலை
தஞ்சாவூரில் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார். இதன் காரணமாக இளைஞரை சிறுமியின் தந்தை ஆணவப்படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. ஆணவ படுகொலைகளை தடுக்க அரசு முனைப்பு காட்டவில்லை - தொல்.திருமாவளவன்
தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ படுகொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டவில்லை என எம்பி தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
5. அரசு மருத்துவர்கள் 17 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.20 போராட்டம்!
அரசு மருத்துவர்களின் 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு அறிவித்துள்ளது.
6. ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த உத்தரவு
சென்னை மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த திட்டம் வகுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் கேஎன் நேரு உத்தரவிட்டுள்ளார்.
7. சர்ச்சையில் சிக்கிய நெல்லை திமுக எம்பி: நடந்தது என்ன?
திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாஜக பிரமுகர் பாஸ்கரை தாக்கியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விரிவான பின்னணி.
8. தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை, பிற ஊர்களுக்கு 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
9. ராகுல் காந்தி வா.. தலைமை ஏற்க வா.. சித்த ராமையா அழைப்பு!
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்த ராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
10. 2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற மூவர்
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்க்ரிஸ்ட், குய்டோ இம்பன்ஸ் ஆகிய மூவரும் 2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.