கொல்லம்: கேரளாவின் கொல்லம் காவநாட்டில் உள்ள சுங்கச்சாவடியில் இருந்த அவசர பாதை வழியே வெளியேற முயன்ற காரை அருண் (சுங்கச்சாவடி ஊழியர்) தடுத்து நிறுத்தினார். இதனால் அருணுக்கும், கார் ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் அருணை, காரில் இருந்த இருவர் சரமாரியாக தாக்கினர். பின்னர் காரில் உள்ளே இருந்தவர்கள் ஜன்னல் வழியாக அருணை காருடன் சேர்த்து சிறிது தூரம் இழுத்துச் சென்று கீழே தள்ளி விட்டனர். பின்னர் சிசிடிவி காட்சி மூலம் கார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். . காயமடைந்த ஊழியர் அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இரண்டு பயணிகளும் வர்க்கலாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் ஷிபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரை ஓட்டி வந்து அருணை தாக்கியது தனது நண்பர் லஞ்சித் தான் என ஷிபு காவல்துறையிடம் கூறியுள்ளார். தற்போது லஞ்சித் மற்றும் அவர்கள் பயணித்த காரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷிபுவும், லஞ்சித்தும் ஆலப்புழாவில் இருந்து வர்கலாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க:யானை தாக்கி வனத்துறை ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு