போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயது குழந்தை நேற்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள 80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. இதையடுத்து, பெற்றோர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில், காவலர்கள், பேரிடர் மீட்பு குழுவினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை, 15 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ஜேசிபி வாகனம் மூலம் 20 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
பின்னர் குழந்தை மயக்க நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர், "குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை இருக்கும் ஆழத்தை சிசிடிசி கேமராவை மூலம் கண்டறிந்து மீட்டோம். இந்த பணியின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் உடனிருந்தனர்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்பின் போது வெடித்த போன்... 8ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்...