மேஷம்: உங்கள் சொந்த திறமையிலேயே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தெய்வீக ஆற்றலின் உதவி இல்லாமலேயே அதைப் பெறுவீர்கள். விஞ்ஞானம் அல்லது கலைத்துறை மாணவராக இருந்தாலும், விஷய ஞானம் மற்றும் ஆழமான அறிவு காரணமாக சிறப்பாகச் செயல்படுவீர்கள். மேற்படிப்புக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
ரிஷபம்: மற்றவர்களை ஈர்ப்பதோ, தாக்கத்தை ஏற்படுத்துவதோ சற்றே கடினமானதே. நல்லது செய்யத் தீர்மானித்திருந்தாலும் கூட சில ஆரம்ப பின்னடைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், இறுதி வெற்றி நிச்சயம்.
மிதுனம்: மதம், சமூக மற்றும் கல்வி நலன்கள் இன்று நாள் முழுவதும் உங்களை ஆக்கிரமித்திருக்கும். அறக்கட்டளை அல்லது தொண்டு நிறுவனங்களுக்காகப் பணத்தை செலவிடுவீர்கள். வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ள உகந்த நேரம் இது.
கடகம்: ஒழுங்கற்ற முறையில் சில பொதுவான சூழ்நிலைகளைச் சமாளிக்க உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். மாலையில் பிறரிடம் இருந்து பொது உளவியல் தொடர்பான சில பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். எந்தவொரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்னர், பாரபட்சமற்று நடுநிலைமையில் இருந்து நன்மை, தீமைகளை மதிப்பிடுவது அவசியம்.
சிம்மம்: அடிக்கடி மனக்கட்டுப்பாட்டை இழக்காதீர்கள். இன்று மனதில் பல்வேறு விதமான எண்ணங்கள் அலைமோதும். குறிப்பாகக் காலையில், எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடைபெறும். டன்கணக்கான பிரச்சினைகளை நிர்வகிக்க வேண்டியிருக்கும். அது உங்கள் அழுத்தத்தை அதிகரிக்கும்.
கன்னி: சிறிய விஷயங்களுக்காக விரக்தியடைய வேண்டாம். இல்லையெனில், உங்கள் உறவுகளில் பாதிப்பு ஏற்படும். சட்ட விஷயங்களில் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே சமரச முடிவு ஏற்படும். மாலையில், உங்கள் மகிழ்ச்சிக்காக ஓரளவு பணத்தைச் செலவழிக்கலாம்.
துலாம்: சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று விலகிச் சென்று விடுமுறையை அனுபவியுங்கள். இந்த பயணத்தினால் புத்துணர்வு ஏற்படுவதோடு, அறிவும் அனுபவமும் அதிகரிக்கும்.
விருச்சிகம்: அவ்வப்போது வாழ்க்கையின் ஆடம்பரங்களை அனுபவித்து மகிழ்வதும் நல்லதே. வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து இருந்தால், அது காதல் நிறைந்த சுக அனுபவமாக இருக்கும். பணியிடத்தில் பிறர் உங்களை நிறுவனத்தின் சொத்தாக நினைத்து மதிப்பார்கள்.
தனுசு: எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே நற்பலன்கள் நடைபெறும். பிறருடைய பங்களிப்புக்காக அவர்களைப் பாராட்டுவதற்கு ஒரு நொடி கூட தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு மிகவும் பிரியமானவர்களை அன்புடன் அரவணைத்துச் செல்வீர்கள்.
மகரம்: நேர்மறையான அணுகுமுறை, விடாமுயற்சி, நேர மேலாண்மை, வலுவான மற்றும் ஆதரவான நல்வாழ்த்துக்கள் என வெற்றிகரமான வாழ்க்கைக்கான அனைத்து காரணிகளும் உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. இருந்தாலும், அதை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பது, அன்பானவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
கும்பம்: அடிக்கடி கற்பனை உலகத்திற்குச் சென்று விடுவதால், நிதர்சனத்தை மறந்துவிடுகிறீர்கள். நடைபெறவே முடியாத விருப்பங்களை விட்டு விடுங்கள். இல்லையென்றால், யதார்த்தத்தை எதிர்கொள்ளும்போது, அதிக ஏமாற்றமே மிஞ்சும். மகிழ்ச்சியாக இருங்கள். சக ஊழியர்களின் உதவி, உங்கள் பணியை சிறப்பாகச் செய்து முடிக்க உதவியாக இருக்கும்.
மீனம்: நாள் முழுவதும் சிறிய அளவிலான கருத்து மோதல்கள் ஏற்படும். முரண்பாடுகள் முடிந்த பிறகு கூட, அதிலிருந்து நீங்கள் வெளியே வரக் காலம் எடுக்கும். வேலையில் முன்னேற்றத்தை விரும்பினால் உங்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.