மேஷம்: இன்று நீங்கள், அமானுஷ்யமான விஷயங்களில் மனதை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த விஷயங்கள் தொடர்பான புத்தகங்களை வாங்க படித்து அறிந்து கொள்ள விரும்புவீர்கள். அதில் உள்ளவற்றை பற்றி விரிவாக பேசுவீர்கள். இந்த அறிவை, நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் கொடுத்து வந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது வருங்கால நலனை கருத்தில் கொண்டு, அவருடன் மோதல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. நாகரீகமாக பழகும் உங்கள் தன்மை தான் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
மிதுனம்: இன்றைய தினத்தில், மேலதிகாரிகள் உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவார்கள். பகல் நேரத்தில் வேலை அதிகம் இருந்தாலும், மாலையில், உங்களது திறமையான பணியின் காரணமாக பெற்ற வெற்றியை கொண்டாடும் வாய்ப்பு உள்ளது. ஏலம் தொடர்பான விஷயங்களில் தற்போது முடிவெடுக்காமல் சிறிது ஒத்திப் போடுவது நல்லது.
கடகம்: இன்றைய தினத்தில், நீங்கள் தயக்கம் ஏதும் இல்லாமல் செயல்படுவீர்கள். உங்களுக்கு இருக்கும் எதிர்மறையான எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் விட்டு விட்டு, பொறுப்புகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். பாதிப்புகளைப் பற்றி அதிகம் கவலைப் படாமல், உங்கள் பணியை தொடரவும்.
சிம்மம்: இன்று முழுவதும், பணியிடத்திலேயே இருப்பீர்கள். பெரிய நிறுவனங்களில் பணி செய்பவர்கள், மேலதிகாரியின், அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பணிகளை மேற்கொள்வார்கள். இல்லத்தரசிகளுக்கு, தினசரி பணிகளை தவிர, வேறுவிதமான வேலைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கும். இது ஒரு முக்கியமான நாளாக இருக்கும்.
கன்னி: இன்று நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள். தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் நேரத்தை திறமையாக நிர்வகித்து, பாடங்களை கற்று முடிப்பார்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.
துலாம்: ஒத்த எண்ணங்களை உடைய மக்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அவர்களுடன், சிறந்த வகையில் பயனுள்ள ஆலோசனைகளை நடத்த முடியும். இதனால் உலகம் குறித்த உங்களது அறிவு விரிவடையும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை, வாழ்க்கையில் காதலும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இன்றைய நாளை திட்டமிடும்போது, வாழ்க்கையில் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இதில் தவறு ஏதும் இல்லை, உங்களது எல்லை என்ன என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
தனுசு: ஒரே விதமான தினசரி பணிகளால் உங்களுக்கு உற்சாகம் இல்லாமல் இருக்கும். கிரக நிலைகளும் மந்தமாக இருப்பதால், இன்று நீங்கள் சந்தோஷம் அடையும் விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு குறைவு. அதனால் பொறுமையாக இருக்கவும். மாலையில் சினிமா பொழுதுபோக்கு என களைகட்டும்.
மகரம்: வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். கடுமையான உழைப்பு, மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தி காட்டுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன், சச்சரவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால், இன்று அந்த மனக்கசப்பு நீங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கும்பம்: நிதி நிலைமை மற்றும் வருமானம் தொடர்பான எண்ணங்கள் அல்லது கவலைகள், உங்கள் மனதில் இன்று முழுவதும் இருக்கும். மாலையில் நீங்கள் நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களை, நீங்கள் ஒதுக்கியதில்லை என்றாலும், இன்று நண்பர்களின் முக்கியத்துவத்தை நீங்கள் முற்றிலுமான உணரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மீனம்: உங்களது உணர்வுகளை, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். உங்களது சிறந்த பேச்சாற்றல் காரணமாக, அறிவார்ந்த மக்கள் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வார்கள். சிறந்த அறிவார்ந்த மக்களுடன் பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இது பணியில் நீங்கள் உயர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: ‘நானே வருவேன்’ - திரையரங்குகளில் தனுஷ் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம்