புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றனர்.
இந்தப் பயணத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒருங்கிணைந்த புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசின் அனுமதி மற்றும் நிதி உதவி கோரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கடிதத்தை அளித்தனர்.
கடிதத்தை பெற்றுக்கொண்ட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் தொடர்பாக உடனடியாக ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் பாபு, சட்டப்பேரவை செயலர் முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர் .
அதன் பின்னர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். புதுச்சேரியில் மூடப்பட்ட சர்க்கரை ஆலை திறப்பது குறித்தும், பட்டானூரில் உள்ள ஏ.எப்டி ஆலைக்கான நிலத்தை விற்பதற்கான அனுமதி குறித்தும் பேசினார்.
இதையும் படிங்க: அரசியல் பிரச்னைகளால் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு நகரும் அமர ராஜா