பெங்களூரு: கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்பது சரியல்ல.
இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூன் 13) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "தமிழ்நாடு அரசு சட்ட விரோதமாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க கூடாது என்று தெரிவித்தார்.
அத்துடன் "கர்நாடகா மாநிலம் தனது பங்கு தண்ணீரை பயன்படுத்துவதற்கு மட்டமே அணை கட்டுகிறது. இதை புரிந்துகொள்ளாமல் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. அதோடு நீண்ட காலமாக அரசியல் செய்துவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: "ஒற்றைத்தலைமை வேண்டும்": ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்!