ETV Bharat / bharat

GST Council Meeting: புற்றுநோய் மருந்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு - நிர்மலா சீதாராமன்

டெல்லியில் நடைபெற்ற 50வது சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புற்றுநோய் மருந்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

GST Council meeting tn finance minister Thangam thennarasu recommendation for tax Exemption for cancer drugs
தங்கம் தென்னரசு
author img

By

Published : Jul 12, 2023, 7:49 AM IST

டெல்லி: விஞ்ஞான் பவனில் மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (ஜூலை 11) நடைபெற்ற 50வது சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளது. எனவே, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரி விதிப்பதற்கான பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு முரணாக இந்த பரிந்துரைகள் இருக்கக் கூடாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், சரக்குகள் மற்றும் சேவைகள் இணையத்தை, பண மோசடி தடுப்புச் சட்டம், 2002 - இன் கீழ் சேர்த்து ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டுள்ள 7 ஜூலை 2023 நாளிட்ட அறிவிக்கை வணிகர்களின் நலனுக்கு எதிராகவும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் சட்டமீறல்களை கிரிமினல் குற்றமற்றதாக மாற்றும் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானதாகவும் உள்ளதால், நாடெங்கும் உள்ள வணிகர்களுக்கு, குறிப்பாக சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இதை எதிர்க்கிறது” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “அரசியலமைப்புச் சட்டத்தின் 11வது மற்றும் 12வது அட்டவணையில் உள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளின் செய்கடமைகள் தொடர்பான சேவைகள் மற்றும் 25 விழுக்காடுக்கு பொருட்கள் மிகாத கூட்டு வழங்குகை சேவைகளை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பெறும்போது தற்போது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் வரிவிலக்கு உள்ளது.

இதனை குறிப்பிட்ட சில வரிவிலக்கு இனங்கள் என வரையறுத்து மாற்றியமைக்க உத்தேசித்துள்ள திருத்தத்தால் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதால், தமிழ்நாடு அரசு தொடர்ந்து இதை எதிர்த்து வருகிறது. எனவே அதனை முற்றிலுமாக கைவிட வேண்டும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

மேலும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டிய மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மாநில அமர்வுகளுக்கு நியமிக்க வேண்டிய நீதித்துறை மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களை தெரிவு செய்ய மாநில அளவிலான தெரிவு செய்யும் குழுவுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் இக்கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, புற்றுநோய்க்கான விலை உயர்ந்த மருந்தினை தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யும்போது செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை குறைப்பதற்கு வரிவிலக்களிக்கும் பரிந்துரைக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவு தெரிவிக்கிறது என தெரிவித்தார்.

குறிப்பிட்ட அரிய வகை நோய்களை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் உணவுகளை தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யும்போது செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கு விலக்களிக்கும் பரிந்துரைக்கும் தமிழ்நாடு அரசு தனது ஆதரவை தெரிவிப்பதாக இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், வணிகவரித் துறை ஆணையர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.