டெல்லி : தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காங்கிரஸ் தேசிய மாணவர் சங்கத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலின் பேரில் தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காங்கிரஸ் தேசிய மாணவர் சங்கத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழ்நாட்டின் தலைவராக சின்னத் தம்பியும் (Chinna Thambi), அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தலைவராக சாருக் யூராவும் (Saruk Yura) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் உடனடியாக அமலுக்குவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ”முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு விவகாரம் : மாநில பட்டியலில் இருந்து ஏன் மாற்றக்கூடாது?”- ஹெச்.ராஜா