ETV Bharat / bharat

சிறுவாணி அணை திறப்பு: பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்

கோயம்புத்தூர் மக்களின் குடிநீர் தேவையினை தீர்ப்பதற்காக சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை திறந்து விட்டதற்காக கேளர முதலமைச்சரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.

பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்

author img

By

Published : Jun 21, 2022, 7:37 AM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நேற்று முன்தினம் (ஜூன் 19) எழுதிய கடிதத்தில், சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், கேரள முதலமைச்சர் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசு சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியின் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை நேற்று (ஜூன் 20) உடனடியாக திறந்து விட்டது.

  • கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை தீர்ப்பதற்காக சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை திறந்துவிட்டமைக்காக மாண்புமிகு கேளர முதலமைச்சர் @pinarayivijayan அவர்களை, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். pic.twitter.com/KiPTTZZraY

    — CMOTamilNadu (@CMOTamilnadu) June 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைத்ததற்காகவும், இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரை வழங்கியதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.

  • Look forward to discussing and resolving issues with the spirit of cooperation and comradeship. We will ensure that both States prosper together. https://t.co/1z0hB1fYJE

    — M.K.Stalin (@mkstalin) June 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"ஒத்துழைப்புடனும், தோழமை உணர்வுடனும் பிரச்சினைகளை விவாதித்து தீர்க்க எதிர்நோக்கி இருக்கிறேன். இரு மாநிலங்களும் இணைந்து வளர்ச்சியடைவதை உறுதி செய்வோம்" என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றிரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்க வேண்டும்’ - கேரள அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.