மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.1) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் முக்கியத்துவம் வாய்ந்த நந்திகிராம் தொகுதியும் ஒன்று. இதில் தனது முன்னாள் தளபதியான சுவேந்து அதிகாரியை பாஜக வேட்பாளராக அவர் எதிர்கொள்கிறார்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நந்திகிராம் தொகுதியில் அத்துமீறல்கள் நடைபெற்றதாக திரணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளன.
நந்திகிராம் தொகுதியின் 197 பூத்தில் பெண் வாக்களார்களிடம் தவறான முறையில் சில மத்திய ரிசர்வ் காவல்படையினர் நடந்துகொண்டதாகவும், அவர்களை விரைந்து பணி நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திருணமூல் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சி பிரதிநிதிகள் தேர்தல் ஆணையரை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எதுக்கும் 2ஆவது நாமினேஷன் செஞ்சுக்கோங்க: மம்தாவுக்கு மோடி அட்வைஸ்!