டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால், மாநிலங்களவையின் இரு அவைகளும் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நண்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி பெகாசஸ் பிரச்னை குறித்து அறிக்கை வெளியிட செல்ல முற்படுகையில் அதனை அனுமதிக்கவில்லை.
அப்போது திருணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கையை கிழித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை நோக்கி எறிந்தார்.
இந்த அமளி காரணமாக, சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இதுகுறித்து பேசிய பாஜக எம்.பி ஸ்வாபன் தாஸ்குப்தா,"அமைச்சரின் கையிலிருந்த காகிதத்தை திருணாமுல் காங்கிரஸ் எம்.பி., கிழித்து எறிந்துள்ளார். இது முற்றிலும் அநாகரிகமான நடத்தை. அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அவரைக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் ஒரு விவாதத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, சபையின் உள்ளே இத்தகைய வன்முறை நடவடிக்கையில் எப்படி ஈடுபடலாம். இது எல்லா விதிமுறைகளுக்கும் முற்றிலும் எதிரானது. இந்த நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம்!