திருமலை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் நிகழும் வைகுண்ட ஏகாதசி நிகழ்வானது தற்போது 2020 டிசம்பரிலும், 2021 ஜனவரி மாதத்தில் வருகிறது. இது வரும் டிசம்பர் 26ஆம் தேதி, ஜனவரி 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலர்கள் கூறும்போது, “வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய தினங்களில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்” என்றனர்.
மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதிமுதல் ஜனவரி 3ஆம் தேதிவரை நாள்தோறும் 20 ஆயிரம் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.
இதற்கான சிறப்பு தரிசன (ரூ.300) முன்பதிவு கோயிலின் அதிாரப்பூர்வ இணையதளத்தில் இன்று காலை (டிச. 11) முதல் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: திருமலையில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நீட்டிப்பு?