உத்தரகாண்டின் புதிய முதலமைச்சராக தீரத் சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவை உறுப்பினாராக உள்ள தீரத் சிங் ராவத், 2013-15ஆம் ஆண்டு காலகட்டத்தில் உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
2012-17ஆம் ஆண்டு காலகட்டத்தில் சௌபத்கால் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்துள்ளார். முன்னதாக, உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக நான்காண்டு காலம் பதவிவகித்த திரிவேந்திர சிங் ராவத், நேற்று (மார்ச்.09) ராஜினாமா செய்தார். சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், பாஜக மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி இம்முடிவை திரிவேந்திர சிங் எடுத்துள்ளார்.
புதிய முதலமைச்சராக தன் சிங் ராவத் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத வகையில் தீரத் சிங் ராவத் தற்போது தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இன்று மாலை நான்கு மணியளவில் அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: உத்தரகண்ட் அரசை டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்!