உத்தராகண்ட் மாநிலம் பெரிநாக் பகுதியில் வசித்துவரும் டிங்கு சிங் தினம்தோறும் ட்ரீம் லெவன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது தனது டீமை உருவாக்கியுள்ளார்.
இரவு 11 மணியளவில் அவர் விளையாடி முடித்தபோது ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார். எனினும் வீட்டில் அது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
அதிகாலை எழுந்தவுடன் தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தான் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பதை கூறிவிட்டு வழக்கம்போல் தனது வேலைக்கு சென்றுள்ளார். ஒரு கோடி ரூபாய் வென்றிருந்தாலும் தனது தூய்மைப் பணியை விட மாட்டேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் கெத்து காட்டும் பினராயி...கருத்துக்கணிப்பு முடிவுகள் அவுட்!