ETV Bharat / bharat

தொடக்கநிலை நிறுவனங்களை ஊக்குவிக்கும் நேரம் - Latest start ups case

5ஜி காலகட்டத்தில் டிஜிட்டல் இந்தியாவுக்கு சுகாதாரம், கல்வி, விருந்தோம்பல் மற்றும் விவசாயத் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற ஊகங்களின் பின்னணியில், அதிகமான ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் நாட்டில் உருவாக வேண்டும். இத்தகைய வளர்ச்சி சார்ந்த விரிவான பாடத்திட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சியும், தரமான கண்டுபிடிப்புகளுக்கு முறையான ஊக்கமும் வழங்கப்பட வேண்டும்.

Time to encourage start-ups
Time to encourage start-ups
author img

By

Published : Jan 7, 2021, 1:34 PM IST

ஒரு நாடு அதன் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமென்றால் சிறந்த வணிக யோசனைகள் மற்றும் புதுமையான தொழில் நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஆனால், நமது நாட்டில் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்ததால், பொறியியல் கல்லூரிகள் வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டது. இதுதொடர்பாக, பி.டெக் மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் ஊக்கமளிப்பதற்காக தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு கே.டி.ஆரின் பரிந்துரை தீவிரமாக பரிசீலிக்கத்தக்கது.

படைப்பாற்றல் மற்றும் புதிய யோசனைகள் ஊக்குவிக்கப்பட்டால், அற்புதமான தொழில்கள் உருவாகலாம். இதை ஒரு நம்பிக்கையாக வைத்திருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாநிலமும் அதை நோக்கி முன்னேற ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி நினைத்தபடி, ஆத்ம நிர்பார் பாரத் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அரசாங்கத்தின் தரப்பில் இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்றைய தொடக்கநிலை நிறுவனங்களை நாளைய பன்னாட்டு நிறுவனங்களாக மாற்றுவதற்கான பிரதமரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அதிகமாக செய்ய வேண்டும்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் தொழில் துறை உச்சிமாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களின்படி, இது போன்ற வியக்கத்தக்கவற்றை செய்ய நம்பிக்கை, ஊக்கம் மற்றும் முதலீடுகள் மிக முக்கியமானவை. தொழில் முனைவோரின் புதுமையான யோசனைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, அவர்களின் நிறுவனங்களுக்கான நிதியுதவி உறுதி செய்யப்பட்டால், எந்தவொரு சவாலையும் எளிதில் சமாளிக்க முடியும்.

கோவிட்-19 நெருக்கடி, நம் நாட்டில் ஏராளமான தொடக்க நிறுவனங்களின் நோக்கங்களை தகர்த்துள்ள நிலையில், அண்டை நாடான சீனா, அதே காலகட்டத்தில் உலகின் உற்பத்தித் தொழில்களின் மையமாக உருவெடுத்துள்ளது. அவ்வப்போது வளரும் தொழில் நுட்ப வாய்ப்புகளையும் சீனா பயன்படுத்திக் கொள்கிறது. நாட்டிற்குள் வேலை தேடுபவர்களை விட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடியவர்களை ஊக்குவிப்பதே குறிக்கோள் என்று நமது அரசாங்கங்கள் கூறி வருகின்றன. புதிய யோசனைகளை ஊக்குவித்து, அதனை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் திட்டங்களுக்கு அரசாங்கங்கள் முன்னுரிமை அளிக்கும்போதுதான் நாட்டில் நிலைமை மேம்படும்.

இஸ்ரேல், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் பள்ளி அளவில் கணினி அறிவியல் பாடத்திட்டங்களைப் பின்பற்றுவதால் அவை மாணவர்களிடையே சிறப்பு ஆர்வத்தை உருவாக்குகின்றன. இது அவர்களுக்கு அதிகமான பொறியியல் கண்டுபிடிப்புகளை அடைய உதவுகிறது. இத்தகைய நிலை நம் நாட்டில் இல்லை. அதன் காரணமாக அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, ​​தொழில்முனைவோர் தொழில் தொடங்குவதற்கு நிதியுதவிப் பெற இந்தியாவில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாக போராட வேண்டியிருக்கிறது என்று தருண் கன்னா கமிட்டி கூறியுள்ளது.

JNTUH போன்ற நிறுவனங்கள் தங்கள் மாணவர்களை படிப்பு முடிந்ததும்; சொந்தமாகத் தொழில் தொடங்க ஊக்குவிக்கின்றன. ஸ்டார்ட்-அப்களைத் தொடங்க இதுபோன்ற ஊக்குவிப்புகள் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.

தகுதியை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் ஒரு வெளிப்படையான வழிமுறையை நாம் உருவாக்கும்போது தான் புதிய தொழில் தொடக்க யோசனைகள் துளிர் விடும். பட்டப்படிப்பு மட்டும் வெற்றிக்கான தகுதி இல்லை என்பதை வாட்ஸ்அப்பின் கதை தெளிவாக நிரூபித்தது. ஃபேஸ்புக்கில் வேலை கிடைக்காத பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் கவும் ஆகியோர் 2009ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்பை உருவாக்கினர்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுக்கு வேலை மறுத்த ஃபேஸ்புக்கிற்கு 1930 கோடி அமெரிக்க டாலருக்கு (கிட்டத்தட்ட 1.25 லட்சம் கோடி ரூபாய்) அவர்கள் செயலியை விற்றனர். Paytm, Flipkart, Swiggy, Byjus மற்றும் Big Basket ஆகியவற்றின் வெற்றிக் கதைகள் தொடக்கங்களின் வலிமையை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

5ஜி காலகட்டத்தில் டிஜிட்டல் இந்தியாவுக்கு சுகாதாரம், கல்வி, விருந்தோம்பல் மற்றும் விவசாயத் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற ஊகங்களின் பின்னணியில், அதிகமான ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகள் நாட்டில் உருவாக வேண்டும். இத்தகைய வளர்ச்சி சார்ந்த விரிவான பாடத்திட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சியும், தரமான கண்டுபிடிப்புகளுக்கு முறையான ஊக்கமும் வழங்கப்பட வேண்டும். அது போன்ற ஒரு கொள்கை தான் சமர்தா விகாஸாக ஒளிவீசி, ஆத்மா நிர்பார் பாரத்தை வெளிப்படுத்த உதவும்.

இதையும் படிங்க: 'விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை': கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.