ETV Bharat / bharat

பன்னா புலிகள் காப்பகத்தில் பொறியில் சிக்கி இறந்து கிடந்த புலி - புலி பலி

மகாராஷ்டிராவின் பன்னா புலிகள் காப்பகம் பகுதியில் மரத்தில் வைக்கப்பட்ட பொறியில் புலி ஒன்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையெல்லாம் வீங்கிப் போகும் அளவுக்கு பரத் அடித்தார் - வாணிபோஜன்

author img

By

Published : Dec 7, 2022, 10:20 PM IST

பன்னா(மகாராஷ்டிரா): இறந்த நிலையில் மரத்தில் தொங்கியபடி ஓர் இரண்டு வயது மதிக்கத்தக்க புலியின் சடலம் பன்னா புலிகள் காப்பகம் அருகே காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொறியானது வாகனங்களில் பயன்படுத்தப்படும் கிளச்(Clutch) வயரால் செய்யப்பட்டது.

இது போன்ற பொறிகள் பொதுவாக வேட்டையர்களால் மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப் படுபவையாகும். வேறொரு விலங்கிற்காக வைக்கப்பட்ட பொறியில் புலி சிக்கியிருக்கலாம் என சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நேற்று(டிச.6) வனத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து வனத்துறை தரப்பில், “நாங்கள் புலி எப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என ஆய்வு செய்து வருகிறோம். புலியின் சடலத்தை உடற்கூராய்விற்கு உள்ளாக்கியும் அதன் மரணம் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதி மக்களிடையும் இதுகுறித்து தகவல் கிடைத்தால் உடனே வனத்துறைக்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எரிபொருள் கசிவு காரணமாக ஃப்ளைபிக் விமானம் ரத்து... பயணிகள் அவதி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.