ETV Bharat / bharat

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையை சேர்ந்த மூவர் கைது.. பெங்களூரில் 20 நாட்கள் தஞ்சம் புகுந்தது ஏன்? - srilankan in india

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக விசா இல்லாமல் பெங்களூருவில் வசித்து வந்த மூன்று நபர்களை பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கை குற்றவாளிகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 10:22 PM IST

பெங்களூரு: இலங்கை குடியுரிமை பெற்ற 3 நபர்கள் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி வருவதாக பெங்களூரு குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து 3 இலங்கை குடியுரிமை பெற்ற நபர்கள மற்றும் பெங்களூருவை சேர்ந்த பிரபல ரவுடியை இன்று (ஆகஸ்ட் 24) காலை குற்றப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்த வந்த நபர்கள் கசன் குமார் சானகா (36), அமில நுவான் (36), மற்றும் ரங்க பிரசாத் (36) என கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக எந்த விதமான ஆவணங்கள் விசா, பாஸ்போர்ட் இல்லாமல் படகின் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

தமிழநாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு வந்தடைந்துள்ளனர். பெங்களூருவுக்கு வந்த இலங்கை நபர்களை பல குற்றங்களை செய்த பிரபல ரவுடி ஜெய் பரமேஷ் (42) , மூவருக்கும் தங்குவதற்கு இடம் கொடுத்து உதவியுள்ளார். மேலும், இவர்கள் பெங்களுருவில் உள்ள எலஹங்கா போலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு (CCP) கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையின் போது 4 நபர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 13 மொபைல் போன்கள், இலங்கை முகவரிகள் கொண்ட விசிட்டிங் கார்டுகள், பஸ் டிக்கெட்டுகள், பேப்பர் கட்டிங், பலரது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல்கள் சிக்கியுள்ளது எனக் போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையின் போது இலங்கையை சேர்ந்த மூவரும் 20 நாட்களுக்கு முன்பாக இந்தியாவின் எல்லைக்கு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மூவர் மீதும் இலங்கையில் தொடர் கொலை வழக்கு உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கசன்குமார் மீது 4 கொலை வழக்குகளும், அமில நுவன் மீது 5 கொலை வழக்குகளும், ரங்கபிரசாத் மீது 2 கொலை மற்றும் 2 தாக்குதல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெங்களூருவில் இவர்கள் ஏதேனும் குற்ற செயல்களை நடத்தி உள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர். ரவுடி ஜெய் பரமேஷ் மற்றும் இலங்கை குடியுரிமை பெற்ற நபர்களை விசாரிக்கையில் இலங்கையை சேர்ந்த மூவருக்கும் சிங்களம் மொழி மட்டுமே தெரிந்ததாலும், மற்ற இந்தி, ஆங்கிலம் மொழிகள் தெரியவில்லை. ரவுடி ஜெய் பரமேஷிற்கு சிங்களம் மொழி தெரியாததால் விசாரணையின் போது போலீசார்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும் கிடைத்த தகவலின் படி இலங்கையை சேர்ந்த மூவருக்கும் ரவுடி ஜெய் பரமேஷ் நடுவில் மூனாவதாக ஒரு நபர் உதவியுள்ளார் என தெரியவந்துள்ளது. போலீசார் அந்த நபரை தொடர்பு கொள்ளும் போது , அவர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தப்பியுள்ளார். இவர் தான் சேலத்தில் மூவருக்கும் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் அந்த நபரை பிடிப்பதற்கு தீவீர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தீரா கடன் தொல்லை ஆறா வடுவாக மாறிய கொடூரம்.. பெற்ற மகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.