சோபியான்: ஜம்மு காஷ்மீர் யூனியன் சோபியானில் சென்ற செவ்வாய்க்கிழமை (மே31) நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் காவலர்கள் 3 பேர் படுகாயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சோபியான் மாவட்டத்தில் உள்ள சீடோ பகுதிக்கு பாதுகாப்பு வீரர்கள் தனியார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் மூவரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக காஷ்மீர் ஐஜிபி இன்று (ஜூன்2) தெரிவித்தார்.
மேலும் இந்தத் தாக்குதலில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா? நாட்டு வெடிகுண்டா அல்லது ஏற்கனவே அந்த இடத்தில் ஐஇடி வெடிப்பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் மேற்கூறிய கேள்விகளுக்கு முழுமையான விசாரணைக்கு பிறகே விடை தெரியவரும் என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை அநீதி - குண்டு வெடிப்பில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரி அனுசுயா