ETV Bharat / bharat

J&K: பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 வீரர்கள் மரணம்!

author img

By

Published : Jan 11, 2023, 10:39 PM IST

வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வாகனம் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 3 வீரர்கள் மரணம் அடைந்தனர்.

3 வீரர்கள்
3 வீரர்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சல் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் இந்திய ராணுவத்தின் 3 வீரர்கள் மாச்சல் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தாக்கில் தவறி விழுந்த வீரர்களை மீட்கும் பணியில் மற்ற ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். மோசமான வானிலை மற்றும் கரடு முரடான பாதை உள்ளிட்ட காரணங்களால் மீட்புப் பணி கடினமாக காணப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பின் இன்று (ஜன.11) அதிகாலை 04.45 மணி அளவில் தவறி விழுந்த 3 வீரர்களின் சடலங்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.

உயிரிழந்த வீரர்கள் பர்சோதம் குமார், ஹாவ் அம்ரிக், அமித் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் பர்சோதம் குமாரை தவிர்த்து மற்ற இரு வீரர்களும் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த வீரர்களின் சடலம் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்றும்; உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ராணுவம் துணை நிற்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குஜராத்தில் மனைவியும், குழந்தையும் 21 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காவலருக்கு ஆயுள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.