போபால்: . இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் மிஸ்ரா அளித்துள்ள பேட்டியில், "மர்ம நபர்கள் சிலர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, குணா மாவட்டத்தில் உள்ள ஆரோன் பகுதிக்கு காவல்துறை குழு சென்றது. காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்த போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்,
அதில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார். . காவல் துணை ஆய்வாளர் ராஜ்குமார் ஜாதவ் மற்றும் இரண்டு காவலர்கள் - நிலேஷ் பார்கவா மற்றும் சாந்தாராம் மீனா ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறினார்.
இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து விவாதிக்க முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உயர் நிலை கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நெருக்கடி தருகிறார்கள்" - ராஜினாமா செய்த ஐபிஎஸ் குற்றச்சாட்டு!