காசியாபாத்: டெல்லி காசியாபாத்தின் முசோரியில் ரயில் தண்டவாளத்தில் மூன்று பேர் இறந்துகிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அய்வு செய்தனர். விபத்தில் சிக்கியது ஒரு பெண், இரண்டு ஆண்கள் என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களது உடல்களை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விபத்தை பார்த்தவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணும், ஆண்களும் ரயில் தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்ததாக கூறுகின்றனர். மூவரும் ரயிலின் வருகை கூட தெரியாத அளவுக்கு வீடியோ எடுப்பதில் மும்முரமாக இருந்ததால் ரயில் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்த இறந்தவர்களின் செல்போன்கள் உடைந்திருப்பதால் அவர்கள் யார் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்தவர் கைது