போபால்: மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள பச்சேரா கிராமத்தில் நேற்று (ஜனவரி 15) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவிடத்துக்கு விரைந்து உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட தகவலில், ஹக்கீம், கோலு மற்றும் பிங்கு உயிரிழந்தது தெரியவந்தது.
இவர்கள் மூவரும் பச்சேரா கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இவர்களுக்கும் நிஷாந்த் தியாகி என்பவரது தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிஷாந்த் தியாகி தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரையும் கொன்றுள்ளனர். இதனிடையே அவர்கள் தலைமறைவாகினர். இவர்கள் போலீசார் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:China Manja: சீன மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் காயம்.. 120 தையல் போட்டு உயிர் மீட்பு...