திஸ்பூர்: இந்தியாவில் மூன்று இடங்களில் இன்று (ஜூன் 18) அதிகாலை அடுத்தடுத்து லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தேசிய புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அஸ்ஸாம் மாநிலத்தின் தேஸ்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.04 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 22 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி தேஸ்பூருக்கு மேற்கு-வடமேற்கில் 36 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
மணிப்பூரில் மொய்ராங் பகுதியில் இன்று நள்ளிரவு 1.06 மணிக்கு 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மொய்ராங்கிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் 39 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தொடர்ந்து, மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணிக்கு 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி நோங்போவிலிருந்து மேற்கு-தென்மேற்கில் 58 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள்!