ETV Bharat / bharat

தெரு நாய்களிடமிருந்து தப்பிக்க கிணற்றில் விழுந்த மூன்று சிறார்கள்

author img

By

Published : Jul 25, 2022, 5:54 PM IST

பிகாரில் நாய்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்த 2 சிறுமிகள் உள்பட 3 சிறார்கள் வறண்ட கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

three-children-jumped-into-a-dry-well-to-escape-from-a-stray-dog-attack-in-bihar

பாட்னா: பிகார் மாநிலம் பெகுசராய் பகுதியை சேர்ந்த நீலம் குமாரி (15), ரீட்டா குமாரி(12), ராம்ப்ரீத் குமார்(15) ஆகிய மூன்று சிறார்கள் இன்று(ஜூலை 25) காலை வழிபாட்டுக்காக அருகில் உள்ள தோட்டத்தில் பூப்பறிக்க சென்றனர்.

அப்போது நான்கு தெரு நாய்கள் மூவரையும் விரட்டியது. அப்போது, மூவரும் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வறண்ட கிணற்றில் தவறி விழுந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டவந்த ஊர் மக்கள், படுகாயங்களுடன் மூவரையும் கிணற்றில் இருந்து வெளியே கொண்டுவந்தனர்.

இதில், நீலம் குமாரி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். ரீட்டா குமாரி, ராம்ப்ரீத் குமார் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாய்ப்பால் கொடுக்கும்போது உயிரிழந்த இளம்பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.