ETV Bharat / bharat

’முதுகில் குத்தி முதலமைச்சர் நாற்காலி தேடியவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்’ - நாராயணசாமி விமர்சனம் - Those who stabbed in the back and left looking for the Chief Minister’s chair

காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்திவிட்டு முதலமைச்சர் நாற்காலியைத் தேடி பாஜகவிற்கு போனவர்கள் நடுத்தெருவில் நிற்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்திவிட்டு முதலமைச்சர் நாற்காலி தேடி பாஜகவிற்கு போனவர்கள் நடுத்தெருவில் நிற்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

author img

By

Published : Mar 12, 2021, 9:21 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "புதுச்சேரியில் டெபாசிட் இழந்த பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்து ஆட்சியை கலைத்ததன் காரணமாக, பல்வேறு கட்சிகளில் இருந்து பலரும் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்திவிட்டு பாஜகவில் இணைந்தவர்கள், அதற்கான பலனைத் தற்போது அனுபவித்து வருகிறார்கள். தேர்தலில் நிற்க தொகுதி கூட இல்லாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் நாற்காலி தேடி போனவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

’முதுகில் குத்தி...முதலமைச்சர் நாற்காலி தேடியவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்’ - நாராயணசாமி விமர்சனம்

இதுதான் பாஜகவின் சரித்திரம். மக்கள் பாஜகவை வெறுக்கின்றனர். என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவை புறக்கணித்து மீண்டும் காங்கிரஸ் - திமுக ஆட்சி மலர மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜகவிற்கு சுயபலம் கிடையாது, பிற கட்சிகளில் இருந்து ஆட்களை இழுத்து பலம் சேர்க்க முயல்கின்றனர். காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க : 130 தொகுதிகளில் அதிமுக vs திமுக!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.