ETV Bharat / bharat

'எதிர்த்தவர்களுக்கும் சொந்தமாகியுள்ளார் ராமர்'- யோகி ஆதித்யநாத் - ராமர் கோயிலுக்கு அடிக்கல்

ராமர் இயக்கத்தை எதிர்த்தவர்களுக்கும் எதிர்மறை மனப்பான்மை உடையவர்களும் தற்போது ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்கின்றனர் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Those who opposed Ram Mandir movement now say Lord Ram belongs to all: Adityanath

author img

By

Published : Jan 4, 2021, 11:44 AM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அங்கு ரூ.500 கோடி மதிப்புள்ள 37 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கரோனா வைரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க பாடுபடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். அவரது வழிகாட்டுதலின் கீழ் நாட்டின் விஞ்ஞானிகள் கரோனா எதிர்ப்பு தடுப்பூசிகளைக் உருவாக்கிவருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா.

முந்தைய அரசாங்கங்கள் நாட்டில் ஒவ்வொரு சர்ச்சையை தொடங்கிவிட்டன. ராமர் ஒரு கற்பனையான கதாபாத்திரம் என்று கூறியவர்கள், இப்போது அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்று கூறுகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.

கார்சேவா இயக்கத்தின் போது, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். ராம ஜென்மபூமி இயக்கத்தை யாரும் எதிர்க்கக் கூடாது என்றும் கூறினோம். இறுதியில், ராமர் பக்தர்கள் செய்த சேவை வெற்றிகரமாக வெளிப்பட்டுள்ளது.

இதனால், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ராமரை அவமதிக்க முயன்று தோல்வியுற்றவர்கள், தற்போது ராமரை சொந்தம் கொண்டாடிவருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: ராமர் கோயிலுக்கு புதிய கட்டுமான முறைகளைப் பரிந்துரைக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.