டெல்லி: பில்கிஸ் பானோ வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ (பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) என்று வெற்று முழக்கங்களைக் எழுப்புபவர்களே, நாடு முழுவதும் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்கள்.
இன்று, நாட்டின் பெண்களின் மரியாதை, உரிமை கேள்விக்குறியாகிவிட்டது. பில்கிஸ் பானோவுக்கு நீதி வழங்குங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். பெண் குழந்தைகளைக் காப்போம் எனும் திட்டம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல், கருவிலேயே பெண் எனப் பாகுபாடு பார்த்து கருக்கலைத்தலை குறைத்தல் உள்ளிட்டவையை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: கர்நாடகா சாலை விபத்து... பிரதமர் நிவாரணம் அறிவிப்பு...