நாட்டின் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை ஒட்டி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவித் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது: " இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். இது நாம் அனைவருக்கும் பொதுவான, இந்தியத்தன்மையை கொண்டாடுவதற்கான தருணம். நமது ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை மற்றும் உயிரோட்டம் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. இந்த ஒற்றுமை உணர்வு, ஒரே நாடாக இருப்பதுதான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கொண்டாட்டம் பெருந்தொற்று காரணமாக எளிமையாக இருக்கலாம். ஆனால் உணர்வு எப்போதும்போல் வலுவாக உள்ளது. சுயராஜ்ஜியத்துக்காக தங்கள் ஈடு இணையற்ற வீரரத்தை வெளிப்படுத்திய மற்றும் மக்களை தூண்டிய சுதந்திர போராட்ட வீரர்களை நாம் நினைவில் கொள்வோம். இரு நாட்களுக்கு முன்பு, ஜனவரி 23ம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்ததினத்தை நாம் கொண்டாடினோம். சுதந்திரத்துக்கான இவரது தாகம், இந்தியாவை கவுரமான நாடாக்க இவர் மேற்கொண்ட லட்சியம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.
அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல்சாசன அவையில், சிறந்த சிந்தனைவாதிகள் இடம் பெற்றிருந்தது நமது பாக்கியம். அவர்கள் நமது சுதந்திரபோராட்டத்துக்கு வழிகாட்டியவர்கள்.
அரசின் செயல்பாட்டு விவரங்கள் அடங்கிய அரசியல் சாசன உரை நீளமானது. இதன் முன்னுரை வழிகாட்டி விதிமுறைகளை சுருக்கமாக கூறுகிறது - ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சுகோதரத்துவம். இவை அடித்தளத்தை அமைக்கின்றன. இதில்தான் நமது குடியரசு நிற்கிறது. இவையே நமது கூட்டுப் பரம்பரியத்தை உருவாக்கும் மதிப்புகள்.
காந்திஜியின் அறிவுரை காலத்தால் அழியாதவை. சுயபரிசோதனை மூலம் நாம் சிறந்த மனிதர்களாக மாறுவதையும், அதன்பின்பே மற்றவர்களுடன் கைகோர்த்து சிறந்த இந்தியா மற்றும் சிறந்த உலகை நாம் உருவாக்க வேண்டும் என அவர் விரும்பினார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, கரோனாவுடன் மனித இனம் போராடி வருகிறது. லட்சக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டோம், உலக பொருளாதாரமே பாதிப்படைந்துள்ளது. இது மனித இனத்துக்கு அசாதாரண சவாலாக உள்ளது.
பெருந்தொற்று மேலாண்மை இந்தியாவில் மிகவும் சிக்கலானதாக இருந்திருக்க வேண்டியது. நம் நாட்டில் அதிக மக்கள் தொகை உள்ளது. வளரும் பொருளாதார நாடாக, கண்ணுக்கு தெரியாத எதிரியை எதிர்த்து போராடும் அளவுக்கு வளங்கள் மற்றும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை. ஆனாலும், இதுபோன்ற சிக்கலான நேரத்தில், நாட்டின் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது. கரோனாவுக்கு எதிராக ஈடு இணையற்ற உறுதியை நாம் வெளிப்படுத்தினோம் என கூறவதில் நான் பெருமையடைகிறேன்.
உள்நாட்டில் தடுப்பூசியை உருவாக்கி, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி நடவடிக்கையை தொடங்கினோம். பிறநாடுகளுக்கும் தடுப்பூசிகளையும், மருந்தகளையும் நாம் வழங்கினோம். இந்தியாவின் இந்த பங்களிப்பை சர்வதேச அமைப்புகள் பாராட்டுகின்றன.
சில பின்னடைவுகள் இருக்கலாம். துரதிர்ஷடமாக இந்த தொற்று மாறுபட்ட புதிய வகைகளுடன் திரும்ப வந்து விட்டது. இந்த தொற்று வேகமாக பரவுவதால், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடந்தாண்டு, நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் சாதனை படைத்தனர். இந்த இளம் சாம்பியன்கள் இன்று லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கின்றனர். நமது நாடு தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று உலகளவில் சரியான இடத்தை பிடிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்." என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு பத்ம பூஷண் விருதா.. விருதை உதறி தள்ளிய முன்னாள் முதலமைச்சர்