கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ரிசர்வ் காவல் துறை ஆய்வாளர் பூவண்ணா. இவரது மனைவி ராகினியும் கடந்த 15 ஆண்டுகளாக தெருவில் வசிக்கும் நாய்களுக்கு உணவிட்டு வருகின்றனர்.
32 ஆண்டுகளாக காவல் துறையில் பணிபுரியும் பூவண்ணாவுக்கு குழந்தை இல்லை. எனவே, இந்த தம்பதி தங்கள் தெருவில் வசிக்கும் நாய்களுக்கு கறி உணவுகளை தொடர்ந்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதற்காக மாதம்தோறும் சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் செலவிடுகிறார் பூவண்ணா. ஒருவேளை தன்னால் உணவு அளிக்க முடியாதபட்சத்தில் அன்றைய தினம் தன்னுடன் பணிபுரியும் நபர்களை வைத்து தவறாமல் இவர் நாய்களுக்கு உணவு கொடுத்து வருகிறார்.