இந்தியாவில் கோவிட்-19 மூன்றாம் அலையின் பரவலைத் தடுப்பது எப்படி என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா கருத்துத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் தற்போதைய கோவிட்-19 நிலவரம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
மூன்றாம் அலையைத் தடுப்பது எப்படி
இது குறித்து அவர் கூறியதாவது: 'மக்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே மூன்றாம் அலையை நாம் தடுத்து நிறுத்த முடியும். கோவிட்-19 வழிகாட்டு நெறிகளை முறையாகப் பின்பற்றி, தடுப்பூசித் திட்டத்தை முழு வீச்சில் மேற்கொண்டால் நிச்சயம் மூன்றாம் அலையைத் தடுத்து நிறுத்தலாம்.
நாடு முழுவதும் தற்போது கோவிட்-19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது.
அதேவேளை, ஒரு சில இடங்களில் பாசிட்டிவிட்டி ரேட் அதிகமாகக் காணப்படுகிறது. அவை ஹாட் ஸ்பாட்டுகளாக மாறாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்' என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட் - 19: குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?