ETV Bharat / bharat

’கோவிட்-19 மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது’ - கே. விஜய் ராகவன் - கரோனா மூன்றாம் அலை

டெல்லி: கோவிட் -19 "மூன்றாம் அலை" தவிர்க்க முடியாதது என முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவன் நேற்று ( மே 5) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

’கோவிட்-19 மூன்றாம் கட்டம் தவிர்க்க முடியாதது’ - கே. விஜய் ராகவன்

author img

By

Published : May 6, 2021, 6:30 AM IST

Updated : May 6, 2021, 9:19 AM IST

கோவிட் - 19 நிலைமை குறித்து அரசு ஆலோசகர் கே. விஜய் ராகவன் நேற்று (மே 5) செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "மாற்றமடைந்த தொற்று அசலை போலவே பரவுகின்றன. இது மனிதர்களை அதிக அளவில் பாதிக்கிறது. இது மனித உடலில் நுழையும்போது, ​​அசலைப் போலவே அதிக அளவிலான தொற்று நகல்களை உருவாக்குகிறது.

கரோனா மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது. அதிக அளவு வைரஸ் புழக்கத்தில் இருப்பதால், மூன்றாம் அலை எப்போது நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாம் புதிய அலைகளுக்கு தயாராக வேண்டும். புதிய வகையான மாற்றங்களுடன் வைரஸானது தப்பிக்கும். எனவே, அதை கவனித்துக்கொள்ள விஞ்ஞான ரீதியாக நாம் தயாராக இருக்க வேண்டும்.

தற்போதைய வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும். உலகம் முழுவதிலும் புதிய மாறுபாடுகள் எழும். நோயெதிர்ப்பில் ஏற்படும் மாறுபாடுகள், ஒன்று நோய் தீவிரத்தை குறைக்கும் அல்லது அதிகரிக்கும்.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த வகையான மாறுபாடுகளை எதிர்பார்த்து, எச்சரிக்கையுடன் முன்கூட்டியே மாற்றியமைக்கப்பட்ட கருவிகளை உருவாக்குவதன் மூலம் விரைவாக தொற்றுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது ஒரு தீவிர ஆராய்ச்சி திட்டமாகும். இது இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நடக்கிறது” என்றார்.

மேலும் செய்தியாளர்களிடையே பேசிய ​​மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், “ 12 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கும், 7 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேருக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவான வழக்குகளே உள்ளன.

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், ஆந்திராவில் சுமார் 1.5 லட்சம் வழக்குகள் உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் சுமார் 1.49 லட்சம் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 38 ஆயிரம் பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் மேலும் விரைவான கோவிட் தொற்று பதிவாகியுள்ளன. அவற்றில் கோழிக்கோடு, எர்ணாகுளம், குருகிராம் ஆகியவை அடங்கும்.

கோவிட் வழக்குகளில் நாளுக்கு நாள் சுமார் 2.4 விழுக்காடு வளர்ச்சி காணப்படுகிறது. இறப்புகளின் அதிகரிப்பு கவனிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, ஹரியானா ஆகியவற்றில் அதிகமான இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன" என்றார்.

இதையும் படிங்க : 2021 தேர்தல்: மீண்டும் காவி எழுச்சியைக் காண்கிறது அசாம்!

Last Updated : May 6, 2021, 9:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.