பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள குப்பி பேருந்து நிலையத்தில் நேற்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து கடத்தப்பட்டது. தகவலறிந்த, ஓட்டுநர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
அத்துடன், பேருந்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதையும் தெரிவித்தார். அதனடிப்படையில், குப்பி பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஜன்னேனஹள்ளியில் பேருந்து நின்றுகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அங்கு விரைந்த காவலர்கள், பேருந்தை கைப்பற்றினர். முதல்கட்ட தகவலில், கடத்தல்காரர்கள் பேருந்தில் இருந்த டீசலை திருடிவிட்டு அங்கிருந்து தப்பியிருப்பது தெரியவந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் அரசுப் பேருந்தை கடத்திய இளைஞர் கைது!