புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால், மதியம் உணவு, புத்தகம், சீருடை, காலணி, புத்தகப்பை, மிதிவண்டி என அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு தடையின்றி வழங்கப்பட்டது. ஆனால், நிதி நெருக்கடியால், இவையெல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டது. புதுச்சேரியில் அரசுக்கென்று தனி கல்வி வாரியம் இல்லை.
ஆகையால், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் வெளியிடும் புத்தகத்தைப் பெற்றுதான் புதுச்சேரி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால், அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்குவதால், மாணவர்களுக்கு காலையில், பாலும், மதியம் உணவும் வழங்கப்படுவதில்லை. இதனால், ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் ஒரு கிராமப்புற அரசுப்பள்ளி மாணவன் மதிய உணவு போடவில்லை பசிக்குது என பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் உயிருக்கு ரேட் ஃபிக்ஸிங்: பேஸ்புக்கில் பேரம் பேசியவர் கைது!