மகாராஷ்டிரா மாநிலம் சந்த்காட் தாலுகாவைச் சேர்ந்த 11 இளைஞர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுற்றுலாவிற்காக கோவா சென்றனர். சுற்றுலாவை முடித்துவிட்டு ஊர் திரும்புவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், தாங்கள் ஹோட்டல் நடத்தி வருவதாகவும், தங்கள் ஹோட்டலில் நல்ல உணவு கிடைக்கும் வாருங்கள் எனவும் அழைத்துள்ளனர்.
இதனை நம்பிய 11 இளைஞர்களும் ’மபாசா’ என்ற இடத்திலுள்ள அந்த ஹோட்டலுக்குச் சென்றனர். அவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு அறைக்குள் வைத்து அடைத்தனர். பின்னர், இளைஞர்களை அடித்து அவர்களது உடைகளை கழற்றி, சிறுமிகளுடன் இருப்பது போல அரை நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுத்தனர். தொடர்ந்து இளைஞர்களிடம் இருந்த பணம், செயின், மோதிரம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்தனர்.
தொடர்ந்து இது குறித்து வெளியில் கூறக்கூடாது என்றும்; கூறினால், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்குவதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். மேலும், இந்த விடயம் வெளியில் தெரிந்தால் கொலை செய்துவிடுவதாகவும் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் செய்வதறியாது திகைத்துப்போயிருந்தனர்.
இந்நிலையில், தற்போது எப்படியோ அவர்களது பிடியில் இருந்து தப்பிய இளைஞர்கள் சந்த்காட் காவல் நிலையத்தில் நடந்தவற்றைக் கூறி, தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி அடையாளம் தெரியாத கும்பலைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் தாய், மகன்கள் கொலை: வழக்கில் தேடப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு