ETV Bharat / bharat

பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வற்புறுத்திய ஆசிரியை

author img

By

Published : Jul 22, 2022, 4:48 PM IST

கர்நாடகாவில் பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்யுமாறு ஆசிரியை வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வற்புறுத்திய ஆசிரியை - சமையலருக்கு மிரட்டல்!

கடக் (கர்நாடகா): கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள நாகாவி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் 7 ஆம் வகுப்பு மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்யுமாறு, அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவர் வற்புறுத்தியுள்ளார். இதனால், மாணவிகளும் கழிவறைகளை சுத்தம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி மானவி ஒருவர் கூறுகையில், “கழிவறையை சுத்தம் செய்யாவிட்டால், ஆசிரியர் எங்களை அடிப்பார். எனவே எங்கள் ஆசிரியர் சொல்வதை செய்ய வேண்டும். இதுபற்றி அலுவலர்களிடம் தெரிவித்தாலும் அடிப்பார். அதேபோல் கழிவறை சுத்தமாக இல்லை. நாங்கள் பயன்படுத்துவதால், 4 முதல் 5 மாணவர்களை சுத்தம் செய்ய ஆசிரியர் கூறினார்.

அதன்படி நாங்கள் சுத்தம் செய்தோம். நான் கழிவறையை சுத்தம் செய்ய தண்ணீர் கொண்டு வந்தேன். மற்றவர்கள் அதனை சுத்தம் செய்தனர். இதுகுறித்த செய்தியை கேட்டு பள்ளிக்கு வந்த அலுவலர்கள், எங்களிடம் யாராவது கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னார்களா என்று கேட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு எல்லாவற்றையும் தெரிவித்தோம்” என கூறினார்.

தொடர்ந்து இப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வரும் விஜயலட்சுமி, “மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சியை எனது மொபைல் போனில் படம் பிடித்ததற்காக ஆசிரியர்களும் அலுவலர்களும் என்னை திட்டினர். நீங்கள் செய்ய வேண்டியதை மட்டும் செய்யுங்கள்; இல்லையெனில் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு டான் அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என மீது கோபமாக பேசினார்கள்’ என தெரிவித்தார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: லிப்-லாக் சேலஞ்ச்... 8 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.