ETV Bharat / bharat

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிரடி பணி நீக்கம்: இந்திய அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி.! - நிதி நெருக்கடி

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கான காரணம் என்ன? இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 1:25 PM IST

சென்னை: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுமார் 70 ஸ்டார்ட் அப் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 17 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் சமீபத்தில் கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 91,000 வேலை வெட்டுக்களை மேற்கொண்டுள்ளன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். இந்திய அளவில் சுமார் 98 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்த உலகளாவிய மையமாக இந்தியா விளங்கி வருகிறது என்ற செய்திகளைப் படித்திருப்போம்.

சீனாவை விட இந்தியாவில் 100 கோடி டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்தது. இதன் அடிப்படையில் கருத்து தெரிவித்த மத்திய அரசு 2025ஆம் ஆண்டிற்குள் இந்திய அளவில் சுமார் 250 யூனிகார்ன்கள் (ஒரு யூனிகார்ன் என்பது 100 கோடி டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கூட்டமைப்பு) தொடங்கப்படும் எனக் கனிப்புகள் வெளியாகின.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் சமீப காலமாக இந்திய அளவில் உள்ள ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், இதனால் செலவு மற்றும் முதலீட்டைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரம் கோடி டாலரை ஈர்த்த நிலையில், 2022ஆம் ஆண்டு அது அப்படியே சரிந்து 2 ஆயிரம் கோடியானது. நடப்பு ஆண்டில் இந்த தொகை ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து 500 கோடி கூட தாண்டாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவை நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியின் உச்சத்தையே குறிப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஓயோ, ஓலா, கார்ஸ் 24 மற்றும் உடன் போன்ற பிரபல நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அது மட்டும் இன்றி அடுத்து வரும் ஆண்டுகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் 'ஸ்டார்ட் அப் இந்தியா' முழக்கத்தை முன் மொழிந்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியது. அதன் அடிப்படையில், இந்தியாவில் 1 லட்சம் யூனிகார்ன்கள் மற்றும் 1 முதல் 2 மில்லியன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் திறன் உள்ளது என முழக்கங்களும் வெளியாகின.

ஆனால் உண்மையில் இது சாத்தியமா? எனக்கேட்டால், தற்போதைய சூழலில், நூறு சதவீதம் சாத்தியம் கிடையாது என்றே ஆய்வு முடிவுகள் கணிக்கின்றன. தெலுங்கானா போன்ற மாநிலங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நிலைநிறுத்தும் நோக்கத்தில் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன அதே நேரம், ஆந்திரா, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அதற்கான வாய்ப்பு இன்றி திணறி வருகின்றன.

அதேபோல, பெங்களூர், டெல்லி மற்றும் மும்பை போன்ற நாட்டின் பெரு நகரங்கள் முதலீடுகளை ஈர்க்க முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. மறுபுறம், நாட்டின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட வளர்ச்சியில் இருக்கும் நகரங்கள் இதில் பின்தங்கியுள்ளன.

நாட்டில் ஸ்டார்ட் அப் மற்றும் யூனிகார்ன்களை தக்க வைக்க அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியவை ; உலக நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு ஒவ்வொரு துறையில் தங்களின் தனித்துவமான முன்னேற்றத்தைக் காணப் போராடி வருகிறது. அந்த வகையில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் இன்னும் பல தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நாட்டின் GDP தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் நிலையில் இது துறை ரீதியாக மட்டும் இன்றி ஒவ்வொரு இந்தியப் பிரஜைகளையும் பாதிக்கும். இதனால், நாட்டில் சீரான நிதி புழக்கத்தைத் தக்க வைக்க வேண்டும். பின்லாந்து, டென்மார்க், அயர்லாந்து போன்ற நாடுகளின் உட்கட்டமைப்பைப் பின்பற்ற வேண்டும். அதேபோல, யுகே, ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்தைப் போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இந்தியாவில் துரிதப்படுத்த வேண்டும்.

இப்படி ஒரு மாற்றம் வரும்போது உலக அளவில், வேலை இல்லாத்திண்டாட்டம் குறைந்து நாடு செழிக்கும் சூழல் உருவாகும். மேலும், இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களைத் தேடிக் கண்டு பிடிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டு தோல்வியைச் சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் டிஜிட்டல் தளத்தை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த துறையில், டிஜிட்டல் மயமாக்கல், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கணிசமான முதலீடுகள் ஆகியவை செழிப்பான வளர்ச்சிக்குப் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Morocco Earthquake : மொராக்கோ நிலநடுக்கம் - பிரதமர் மோடி இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.