இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, அந்நாட்டு அரசு தவறாகக் கையாண்டதற்காக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. அது ஒரு கட்டத்தில் பெரும் வன்முறையாகவும் வெடித்தது.
முக்கியமாக போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அப்போது, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் இலங்கையிலிருந்து வெளியேறினார். இவ்வாறு வெளியேறிய ராஜபக்சே, மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார்.
பின்னர் தனிப்பட்ட பயணமாக மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் ஷாங்கி விமான நிலையத்திற்கு ஜூலை 14 ஆம் தேதி சென்றார். . இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு புதிய விசாவொன்றை வழங்கியுள்ளது.
அவர் நாட்டில் தங்கியிருப்பதை மேலும் 14 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 11 வரை நீட்டித்துள்ளது.
இதையும் படிங்க: இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் அரசியல் பாதை!