புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது. இதனை அடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர், இரு அமைச்சர்கள் பதவியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால், அதற்கான பட்டியலை பாஜக மேலிடம் ஒப்புதல் தந்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சபாநாயகர் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஜூன்.12) வெளியானது.
இதுகுறித்து தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் கூறுகையில், ’புதுச்சேரி மாநிலத்தின் 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜூன் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெறும். இதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌதர்ராஜன் ஒப்புதல் அளித்தார். மேலும் அன்றைய தினமே சபாநாயகர் தேர்தல் நடத்தவும் அனுமதி வழங்கியதோடு, தேர்தல் நியமன சீட்டுகளை பேரவை செயலரிடம் பெற அறிவுறுத்தினார்.
எனவே, நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தனித்தனியாக அனுப்பியுள்ளோம். பின் அதனை வரும் ஜூன் 15ஆம் தேதி நண்பகல் 12 வரை தரலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 27ஆண்டுகளுக்கு பின்பு பிஎஸ்பியுடன் கூட்டணி வைத்த சிரோமணி அகாலி தளம்