ETV Bharat / bharat

கொலஸ்ட்ரால், பிபி இருக்கா?... சமீபத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் உயர் நிலைகளை நோக்கிய மரபணு போக்கு கொண்டவர்களுக்கு அல்சைமர் நோய் வரும் அபாயம் உள்ளது என சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

health
உடல் ஆரோக்கியம்
author img

By

Published : May 21, 2023, 1:50 PM IST

லண்டன்: உயர் ரத்த அழுத்தம் (high bp) மற்றும் கொலஸ்ட்ரால் (cholesterol) ஆகியவை மரபணுவில் அதிக அளவு உள்ளவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சமீபத்தில் JAMA Network Open என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், மருத்து ரீதியாக கண்டறியப்பட்ட அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 39,106 பேரும், நோய் இல்லாத கட்டுப்பாடுகளுடன் 401,577 பேரும் உள்ளடங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, HDL (high density lipoprotein) அல்லது "நல்ல" கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்புப் புரதம் எனப்படும் ஒரு வகையான கொழுப்பு உயர் மட்டத்திற்கு வழிவகுத்த ஒரு சில மரபணுக்களைக் கொண்டவர்களுக்கு அல்சைமர் வருவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

இது எச்டிஎல் கொழுப்பின் ஒவ்வொரு நிலையான விலகல் அதிகரிப்புக்கும், அல்சைமர் அபாயத்தில் சுமார் 10 சதவீதம் அதிகரிப்பதை டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் குழு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அதிக சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்திற்கு காரணமான மரபணுக்களைக் கொண்டவர்களுக்கும் இதேபோன்ற அதிக ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 மில்லி மீட்டர் பாதரசம் (mm Hg) சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தில் அதிகரிப்பதால், அல்சைமர் நோய் வருவதற்கான ஆபத்து 1.22 மடங்கு அதிகரிக்கிறது.

இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் குழந்தையின் பேச்சாற்றல் அதிகரிக்கிறது - ஆராய்ச்சியில் ஆச்சரிய தகவல்

இது குறித்து மரபியல் சங்க ஆய்வு கூறுகையில், உயர் HDL கொலஸ்ட்ரால் செறிவுகள் மற்றும் அல்சைமர் நோய்க்கான அதிக அபாயத்துடன் கூடிய உயர் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையே புதிய மரபணு தொடர்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் புதிய மருந்து இலக்கு மற்றும் மேம்படுத்தப்பட்ட தடுப்பு செயல்படுத்தலை ஊக்குவிக்கும் என பல்கலைக்கழகத்தின் மருத்துவ உயிர்வேதியியல் துறையைச் சேர்ந்த ரூத் ஃப்ரிக்கே-ஷ்மிட் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆய்வில், பிற கொழுப்புப் பண்புகளுடன் மரபணு தொடர்புகளுக்கு நிலையான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை, என்றும் ;பிஎம்ஐ (BMI), மது அருந்துதல், புகைபிடித்தல் அல்லது நீரிழிவு ஆகியவை அல்சைமர் நோயை உருவாக்கும் முரண்பாடுகளை அதிகரித்துள்ளன என்பதற்கான ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை. பெரும்பாலும் பங்கேற்பாளர்கள் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆய்வைப் பொதுமைப்படுத்த முடியாது. அல்சைமர் நோய்க்கு மரபணுக்கள் மக்களை முன்கூட்டியே தீர்மானிக்கின்றன என்பதை ஆய்வில் காட்டவில்லை எனவும் ஆராய்ச்சியின் அவசியத்தையும் இக்குழு வலியுறுத்தியுள்ளது.

அல்சைமர் நோய் என்பது நரம்பியல் பாதிப்புகளால் ஏற்படும் நாள்பட்ட மறதி நோயாகும்.

இதையும் படிங்க: இந்தியாவில் முதல் முறையாக கன்னாபிடியோல் மருந்து கரைசலுக்கு CDSCO அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.