ETV Bharat / bharat

தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த இளைஞர்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தண்ணீர் என நினைத்து ஆசிட்-ஐ (திராவகம்) குடித்த இளைஞரின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

acid
acid
author img

By

Published : May 19, 2022, 7:06 AM IST

தோல்பூர்: பாலைவன தேசமான ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள சைபாவ் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாசிமோன் என்ற பகுதியில் 40 வயதான லவ் குஷ் என்ற இளைஞர் வசித்துவருகிறார்.

இவர் கண்ணாடி சுத்தம் செய்யும் பணி செய்துவருகிறார். இந்த நிலையில், கண்ணாடி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தண்ணீர் தாகம் எடுக்க அருகில் இருந்த ஆசிட்-ஐ தண்ணீர் என தவறுதலாக நினைத்து குடித்துவிட்டார்.

இந்த நிலையில் ரத்த வாந்தி எடுத்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞர் மீது ஆசிட் வீசிய பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.