ETV Bharat / bharat

ஞானவாபி மசூதியில் கள ஆய்வு நிறைவு!

author img

By

Published : May 16, 2022, 1:21 PM IST

வாரணாசி ஞானவாபி மசூதியில் நடைபெற்று வந்த கள ஆய்வு நிறைவடைந்தது.

gyanvapi
gyanvapi

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், அதன் அருகே உள்ள ஞானவாபி மசூதிக்கும் இடையே சுற்றுச்சுவர் ஒன்று உள்ளது. இந்த சுவற்றில் சிங்கார கெளரி அம்மன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன. கடந்த 1991ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சிங்கார கெளரி அம்மனுக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிங்கார கெளரி அம்மனுக்கு தினந்தோறும் பூஜை நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கடந்த 2021ஆம் ஆண்டு, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிங்கார கெளரி அம்மன் கோயிலின் அமைப்பு குறித்து வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக, மூத்த வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா தலைமையில், இந்து, முஸ்லீம் வழக்கறிஞர்கள் அடங்கிய நீதிமன்றக் குழுவை அமைத்தது. இந்தக் குழு கடந்த 6ஆம் தேதி மசூதி வளாகத்தில் கள ஆய்வை தொடங்கியது.

இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கள ஆய்வை 17ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கள ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. அதேநேரம் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற மசூதி நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்றது.

இந்நிலையில் நீதிமன்றக்குழு ஞானவாபி மசூதியில் கடந்த 14-ம் தேதி முதல் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வந்த கள ஆய்வு இன்று(மே 16) நிறைவடைந்தது. மசூதியின் குவிமாடங்கள், அடித்தளம், குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வீடியோ பதிவுடன் கள ஆய்வு நடத்தப்பட்டதாகவும், எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக ஆய்வு முடிவடைந்ததாகவும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

நாளை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உரிய நேரத்தில் அறிக்கை தயாராகவில்லை என்றால் மேலும் கால அவகாசம் கேட்போம் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஞானவாபி மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு - திரும்பிச் சென்ற நீதிமன்ற குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.