சேரளா: தென்கிழக்கு அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கேரளாவில் பரவலாக மழை பெய்துவந்தது. கடந்த அக்டோபர் 15ஆம் தேதி அன்று காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுபெற்றதால் கேரளா முழுவதும் கனமழை பெய்தது.
இடைவிடாத பெய்த கனமழையால் கேரளாவே வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக, திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தவித்துவருகின்றனர்.
![நிலச்சரிவு கேரளா நிலச்சரிவு கேரளாவில் வெள்ளம் கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு அதிகரிப்பு kerala rain kerala heavy rain landslides in Kerala death toll from heavy rains and landslides in Kerala rose to 23](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2021-10-17-at-122855-pm_1710newsroom_1634459640_23.jpeg)
இதனைத் தொடர்ந்து பலத்த மழை காரணமாக கோட்டையம் மாவட்டம் கூட்டிங்கால், இடுக்கி மாவட்டம் கோக்கையார் பகுதிகளில் கடந்த அக்டோபர் 16 அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கியவர்களை மீட்பதற்காக ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
![நிலச்சரிவு கேரளா நிலச்சரிவு கேரளாவில் வெள்ளம் கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு அதிகரிப்பு kerala rain kerala heavy rain landslides in Kerala death toll from heavy rains and landslides in Kerala rose to 23](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kl-ktmupdation_17102021101926_1710f_1634446166_48_1710newsroom_1634453083_65.jpg)
இதில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோட்டயத்திலிருந்து 14 உடல்களும், இடுக்கியிலிருந்து இதுவரை ஒன்பது உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கோட்டயம் கூட்டிக்கல்லிலிருந்து மொத்தம் 12 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.