அமராவதி (ஆந்திரா): மசூலிப்பட்டினத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா மாவட்டம், கூடூரில் உள்ள எட்டாம் வகுப்பு படித்து வந்த நவீன் என்ற மாணவன் நேற்று (நவ.6) கடலில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், கரை ஒதுங்கிய மாணவனின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்தபடி மாணவனின் உறவினர் ஒருவர் கண்ணீருடன் கொண்டு சென்ற காட்சி அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக, உயிரிழந்த மாணவனின் சடலத்தை எடுத்துச்செல்ல அலுவலர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 4ஆவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் தந்தை எடுத்த விபரீத முடிவு