ETV Bharat / bharat

’பெண் எம்பிக்கள் போகப்பொருள் அல்ல...’ - பொங்கிய ட்விட்டர்வாசிகள்... வருத்தம் தெரிவித்த சசி தரூர்

காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஆறு பெண் எம்பிக்களுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பகிர்ந்த பதிவு ட்விட்டரில் கடும் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், முன்னதாக அப்பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆறு பெண் எம்பிக்களுடன் செல்பி
ஆறு பெண் எம்பிக்களுடன் செல்பி
author img

By

Published : Nov 29, 2021, 5:49 PM IST

டெல்லி: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று (நவ.29) தொடங்கிய நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, சுப்ரியா சுலே, பிரனீத் கவுர், மிமி சக்ரவர்த்தி, நுஸ்ரத் ஜஹான் ரூஹி ஆகிய ஆறு பெண் எம்பிக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

நகைச்சுவையாகப் பதிவிட்ட சசி தரூர்... பொங்கிய நெட்டிசன்கள்

“லோக்சபா கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் சொன்னது?” என்ற வாசகத்துடன் காங்கிரஸ் எம்பி சசி தரூர் பகிர்ந்த இந்தப் பதிவு ட்விட்டரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இப்பதிவு பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் வகையிலும், பிற்போக்குத்தனமாகவும் இருப்பதாகக் கூறி நெட்டிசன்கள் பலரும் இன்று காலை முதல் சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

’எம்பிக்கள் போகப்பொருள் அல்ல’

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா , "நாடாளுமன்றம், அரசியலில் அவர்களின் பங்களிப்பைத் தவிர்த்து, அவர்களை ஈர்ப்புப் பொருளாக மாற்றி இழிவுபடுத்துகிறீர்கள். நாடாளுமன்றத்தில் பெண்களை பிற்போக்குத்தனமாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

அதேபோல் உச்ச நீதிமன்ற நீதிபதி கருணா நந்தி, சமத்துவம் பேசும் சசி தரூர் போன்றோரும் பெண் எம்பிக்களின் தோற்றத்தைப் பற்றி பேசி அவர்களை சிறுமைப்படுத்தி தன்னை முதன்மைப்படுத்திக் கொள்கின்றனர். இது 2021ஆம் ஆண்டு மக்களே...” என ட்வீட் செய்துள்ளார்.

ஆறு பெண் எம்பிக்களுடன் செல்பி
ஆறு பெண் எம்பிக்களுடன் செல்பி

வருத்தம் தெரிவித்த தரூர்

இந்த செல்பி பதிவு நகைச்சுவை உணர்வுடன் பகிரப்பட்டது என்றும், பெண் எம்பிக்களும் அதே நகைச்சுவை உணர்வுடன் பதிவிடுமாறு கூறிய பின்னர் தான், அப்பதிவை தான் பகிர்ந்ததாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

மேலும், "சிலரை புண்படுத்தியதற்கு வருந்துகிறேன். ஆனால் இந்த பணியிட தோழமை நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. அவ்வளவுதான்" என பகிர்ந்துள்ளார்.

சசி தரூர்
சசி தரூர்

மஹுவா மொய்த்ரா ஆதரவுக்குரல்

இந்நிலையில், திருணமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா முன்னதாக தரூரை ஆதரித்து ட்வீட் செய்துள்ளார்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா இன்று காலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், " இன்று வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்த விவாதத்தை முன்னெடுக்காமல், கவனத்தை திசை திருப்பும் வகையில் அருவெறுக்கத்தக்க ட்ரோல்களால் சசி தரூர் மீது தாக்குதல் நடத்துவதில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை” என ட்வீட் செய்துள்ளார்.

  • The whole selfie thing was done (at the women MPs' initiative) in great good humour & it was they who asked me to tweet it in the same spirit. I am sorry some people are offended but i was happy to be roped in to this show of workplace camaraderie. That's all this is. https://t.co/MfpcilPmSB

    — Shashi Tharoor (@ShashiTharoor) November 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: காங்கிரஸ் கூட்டம்... திமுக ஆஜர், சிவசேனா புறக்கணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.