ETV Bharat / bharat

விற்பனையில் சாதனை... நம்பர் 1 எலக்ட்ரிக் கார்... டெஸ்லா நிறுவனம் பெருமிதம்!

டெஸ்லா நிறுவனத்தின் Y மாடல் எலக்ட்ரிக் கார், நடப்பாண்டில் அதிகளவில் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tesla car
டெஸ்லா கார்
author img

By

Published : May 27, 2023, 6:29 PM IST

டெல்லி: உலகின் பெரும் செல்வந்தரான எலான் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனம் தான் டெஸ்லா. எலக்ட்ரிக் கார், சோலார் பேனல்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனினும் கார் தயாரிப்பில் தீவிரம் காட்டும் டெஸ்லா நிறுவனம் மாடல் S, மாடல் 3, X, Y, ஆகிய ரக கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகளவில் மாடல் Y ரக கார், அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜாட்டோ டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2023 காலாண்டில் 2 லட்சத்து 67,200 'டெஸ்லா மாடல் Y' கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் 2,56,400 டொயோட்டா கொரேல்லா நிறுவன கார்களும், 2,14,700 RAV 4 நிறுவன கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற வாகன தயாரிப்பு நிறுவனங்களை விட, அதிகமான கார்களை விற்பனை செய்து அமெரிக்காவில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளுடன் எலக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் முன்னணியில் இருப்பதாக டெஸ்லா நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் அனைத்து அமெரிக்க பயணிகள் வாகன விற்பனையில் எலக்ட்ரிக் கார் விற்பனை 7 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என கவுண்டர் பாயிண்ட் ஆய்வில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் 10 லட்சம் Y மாடல் கார் விற்பனையாகும் என்று, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் 2016ஆம் ஆண்டு கூறியிருந்தார். 2021ம் ஆண்டு இந்த ரக கார், உலகின் நம்பர் 1 காராக இருக்கும் என்றும் அவர் கணித்தார். உலகில் எந்த வகையிலும் மாடல் Y கார், அதிகம் விற்பனையாகும் காராக இருக்கும் என தாங்கள் நினைப்பதாகவும், இது மிகவும் சாத்தியம் என்றும் முதலீட்டாளர்களிடம் எலன் மஸ்க் கூறியிருந்தார்.

இதுகுறித்து கார் விற்பனை ஆய்வாளர் அபிக் முகர்ஜி கூறுகையில், "டெஸ்லா நிறுவனம் அமெரிக்க எலக்ட்ரிக் கார்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்நிறுவனத்தின் கார்களை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அதே நேரத்தில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெல்லாண்டிஸ், வோக்ஸ்வாகன் மற்றும் ஹூண்டாய் போன்ற பிற வாகன நிறுவனங்கள், டெஸ்லா நிறுவனத்துடன் கடும் போட்டியிடுகின்றன. டெஸ்லாவின் சமீபத்திய விலை குறைப்புகள் மற்றும் டெஸ்லாவின் மாடல் Y -இன் அனைத்து பதிப்புகளும் வரிக்கடன் மானியத்திற்கு தகுதி பெறுவதால், டெஸ்லா இன்னும் அதிக சந்தைப் பங்கைப் பெறும்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உங்களிடம் இ-பைக் இல்லையா? - ஜூன் மாதம் முதல் சண்டிகரில் வருகிறது புதிய நடைமுறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.