பூஞ்ச் : ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் மாவட்டம் அடுத்த தனமந்தி எல்லைப் பகுதியில் சென்று கொண்டு இருந்த இந்திய ராணுவத்தின் வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்தின் டிரக் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தாக்குதலின் போது வாகனத்தில் ராணுவ வீரர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மறைந்த இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் இந்த தாக்குதல் இந்திய ராணுவ வீரர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்களை இதுவரை ராணுவம் வெளியிடவில்லை.
கூடுதல் பாதுகாப்பு படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாகவும், விரைவில் முழுத் தகவல் வெளியிடப்படும் என்றும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உளவுத் துறையின் தகவலை அடுத்து சம்பவ பகுதியில் கூட்டு ஆபரேஷன் நடத்தப்பட்டதாகவும் அதன் தொடர்ச்சி இன்று (டிச. 21) மாலை தொடர்ந்து வருவதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடர்ந்து வருவதாகவும், விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வாகனத்தில் இருந்து சில வீரர்கள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், கூடுதல் படைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சண்டை தொடர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மீண்டும் சிக்கலில் ராகுல் காந்தி! சர்ச்சை பேச்சு விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு! தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?