உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கடந்த 2006ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. வாரணாசி சங்கட் மோச்சக் கோயில், கன்டோன்மென்ட் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இந்த தொடர் குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
இந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டதாக வலியுல்லா என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் இரண்டு வழக்குகளில் வலியுல்லா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:கர்நாடகாவில் அதிர்ச்சி: சுகாதாரமற்ற குடிநீர் அருந்திய 3 பேர் உயிரிழப்பு!